தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தரங்கம்பாடி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயில் கும்பாபிஷேகம்! - Sri Markandeya Swamy Temple

Sri Markandeya Swamy Temple Kumbhabhishekham: தரங்கம்பாடியில் உள்ள ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயில் கும்பாபிஷேகம், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயில் கும்பாபிஷேகம் புகைப்படம்
ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயில் கும்பாபிஷேகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 2:24 PM IST

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா டி.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வரர் சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இது ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை பெற வேண்டி சிவபெருமானை வழிபட்ட திருத்தலமாகவும், ஸ்ரீ மிருகண்ட மகரிஷி நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட வெகு காலம் சிவ பூஜை செய்து வந்ததாகவும் புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயில் கும்பாபிஷேகம் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்படி சிவபூஜை செய்யப்பட்ட ஆலயமே டி.மணல்மேடு கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி கோயில். மேலும், பல்வேறு சிறப்புகளுடைய இக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. தற்போது இதற்கான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம் செய்து கோயில் வளாகத்தில் யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டது, தொடர்ந்து 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கல் வைத்து யாக குண்டத்தில் சிவாச்சாரியார்களால் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று 6ம் கால யாக சாலை பூஜை நிறைவுற்று, மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞான சம்பத பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில், மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

அதையடுத்து வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 171வது ஆண்டு சப்பர பவனி திருவிழா; சேர்ந்தமரம் புனித சின்னப்பர் தேவாலயத்தில் கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details