தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆன்மீக ஆபாச கருத்துகள்" - போராட்டத்தில் குதித்த எஸ்.எப்.ஐ.. யார் இந்த மகாவிஷ்ணு? - Chennai Mahavishnu controversy - CHENNAI MAHAVISHNU CONTROVERSY

Chennai school Mahavishnu controversy: அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை கண்டித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 11:03 AM IST

சென்னை:சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர், மாணவர்களிடம் ஆன்மீக தேடல் பற்றி வகுப்பு சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எப்.ஐ மாணவர்கள் (Credit - ETV Bharat)

ஆன்மீக சொற்பொழிவு:ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளிகளில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு, 'தன்னை உணர்தல்' என்கிற ரீதியில் மாணவர்களிடம் பேசியுள்ளார். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார்.

மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து பாடலை ஒலிக்க விட்டு அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சில் மாணவிகள் பலர் உணர்ச்சி வசப்பட்டு அழுகின்றனர். இதற்கு அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆசிரியருக்கும், மகாவிஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோவையும் மகா விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இதற்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அரசுப் பள்ளியில் இவர் இது போன்ற நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர் சங்கத்தினர் போராட்டம்:இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எப்.ஐ) மாணவர்கள், அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்த அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெரியார் மண், திராவிட அரசு எனக் கூறிய இவர்கள் ஆன்மீகத்தை ஊக்குவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

யார் இந்த மாகவிஷ்னு:பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகாவிஷ்ணு சிறு வயதில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செயல்பட்டுள்ளார். தற்போது திருப்பூரை மையமாகக் கொண்டு பரம்பொருள் ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறார்.

அமைச்சர் விளக்கம்:பள்ளி மாணவர்களிடம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியது பேசுபொருளான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் உத்தரவிட்டுள்ளார். 17 (A) விதியின் கீழ் பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை.. ஆசிரியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details