தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி தைப்பூசம்: மதுரையில் இருந்து சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Palani Thaipusam: பழனி தைப்பூசத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 24, 25 தேதிகளில் மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 10:55 PM IST

மதுரை: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் ஜனவரி 25ஆம் தேதி அன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்காக மதுரை - பழனி இடையே ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி மதுரை - பழனி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் பழனி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழனியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொதுக் குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு மீண்டும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details