தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை?.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெரியார் சிலை உடைப்பு மற்றும் கனிமொழி குறித்த அவதூறு பேச்சு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இரண்டு வழக்கிலும் தனித்தியாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

ஐகோர்ட், எச். ராஜா
ஐகோர்ட், எச். ராஜா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை:பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி கனிமொழி மீது விமர்சனம் செய்தாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இரண்டு வழக்கிலும் தனித்தியாக 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. இதற்கு, எதிர்த்து எச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், 2018 ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாகக் கருத்து கூறியதாகவும், பல்வேறு காவல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், கனிமொழிக்கு எதிரான புகாரில் ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. பின்னர், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அப்போது, எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர், "பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த ஆதாரங்கள் ஆவணங்கள் எதனையும் விசாரணை அதிகாரி மற்றும் புகார்தாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கின் இருந்து விடுதலை செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக தாக்குதல் வழக்கு: சம்மன் அனுப்பி குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை நவம்பர் மாதம் 14ஆம் தேதி தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கில் இன்று (டிச.2) தீர்ப்பளித்தார். அதில், "41 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும், இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

அவ்வாறு தான் கருத்து பதிவு செய்யவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்களும் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே, எச்.ராஜா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை எதிர்த்து எச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.

'எச்.ராஜாவுடன் இருப்போம்':அண்ணாமலை இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் மூன்று மாத படிப்பை முடித்து நேற்றைய தினம் (டிச.01) சென்னை வந்தடைந்ததை அடுத்து, இன்று (டிச.02) சென்னை பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய அண்ணாமலை, "பெரியார் சிலை உடைப்பு மற்றும் கனிமொழி குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. நிச்சயமாக எச்.ராஜா-விற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம், மாறுபட்ட தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. மேலும், எச்.ராஜா-வுடன் எப்போதும் உடன் இருப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details