தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு - Tambaram to Nagercoil special train

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:52 PM IST

Tambaram to Nagercoil special train: தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை மேலும், 3 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்துச் சென்றனர். அதனால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாகச் சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

அந்த வகையில், தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை மதுரை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் சேவை மேலும் 3 வாரக் காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூலை 7, 14, 21 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறு மார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) ஜூலை 8, 15, 22 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு, இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். தற்போது இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறைகளா?- ஐஆர்சிடிசி விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details