சென்னை: சென்னையில் நாளை முதல் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் ஆகஸ்ட் 2 வரை வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் பகல் நேர புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தெற்கு ரயில்வே அதில் மாற்றம் செய்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வார நாட்களில் இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 வரை மட்டும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான சனி (ஜூலை 27) மற்றும் ஞாயிறு (ஜூலை 28) மட்டும், காலை மற்றும் இரவு நேரங்களில் முன்பு அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. நாளை முதல் பகல் பொழுதில் புறநகர் மின்சார ரயில்கள் வழங்கம்போல் இயங்கும்.
ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே தற்போது தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:24 நாட்களுக்கு சென்னை பீச் - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.. போக்குவரத்து நெரிசல் அபாயம்.. காவல்துறை தீவிர ஆலோசனை! - tambaram local train cancelled