தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! - SOUTHERN RAILWAY

பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 8:44 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை கொண்டாடப்படவுள்ளது. இதுபோன்ற தொடர் விடுமுறைகளுக்கு சென்னை மக்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது சுமார் 6 நாட்கள் வரை விடுமுறை உள்ள நிலையில், இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

அதனால், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்:

தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண் - 06093) ஜனவரி 13 ஆம் தேதியன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். அதேபோல், மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06094) ஜனவரி 14 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாலை 03:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06:15 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

நாகர்கோவில் சிறப்பு ரயில்:

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06089) ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01:00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06090) ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.

இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள்:

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் - 06091) ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 03:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 04:55 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06092) ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 03:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04:10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிங்க:திண்டுக்கல் - திருச்சி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்!

மேலும், இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்:

ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06104) ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03:30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். அதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06103) ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05:15 மணிக்கு ராமநாதபுரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், இந்த ரயில்களில் 10 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். தற்போது, மேற்கண்ட அனைத்து ரயில்களுக்கும் பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) காலை 8 மணிக்கு துவங்குகிறது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details