சென்னை: Born2win social welfare trust நடத்தும் தென்னிந்திய திருநங்கை ராணி 2024 அழகி போட்டி போட்டியானது அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூர் மியூசிக் தியேட்டரில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை, ஈரோடு, மதுரை, நாமக்கல், காஞ்சிபுரம், கோவை, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி, டெல்லி போன்ற பகுதிகளில் இருந்து மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர். அப்போது, திருநங்கை ராகினி பேசுகையில், "திருநங்கைகள் என்றாலே இங்கு பலருக்கும் தவறான பார்வை உள்ளது. அதை மாற்றும் அடிப்படியில் தான் Born2win social welfare trust பல உதவிகளை செய்து வருகிறது. இதன் நோக்கம், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் சுயதொழில் ஆரம்பித்து சமூகத்தில் பெரிய அளவில் உயர வேண்டும் என்பதுதான்.
இந்த டிரஸ்ட் மூலமாக திருநங்கைகளுக்கு டிரைவிங், தையல் மற்றும் பல விதமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கிறோம். இந்த போட்டி எக்மோர் மியூசிக் தியேட்டரில் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் 14 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர் " என்றார்.
இதையும் படிங்க:தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?