கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தேர்தல் ஆணையம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. பாரதிய ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திராவிட தெலுங்கு தேசம் கட்சி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், அக்கட்சியின் தலைவரான, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எச்சனஅள்ளியைச் சேர்ந்த ஆறுமுகம் வேட்புமனு செய்துள்ளார்.
இந்த கூட்டணி தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆறுமுகத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மிரட்டியதாக கூறப்படுகிறது.