ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (ஜூன் 14) ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற படகு சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து, படகில் இருந்த ஐந்து நபர்களில் இரண்டு நபர்கள் அருகில் இருந்த படகு மூலம் கரை திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்! - Rameswaram Fishermen missing - RAMESWARAM FISHERMEN MISSING
Rameswaram Fishermen missing: ராமேஸ்வரம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் மாயமான மூன்று பேரில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Published : Jun 15, 2024, 11:46 AM IST
இருப்பினும், மூன்று மீனவர்கள் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து, சக மீனவர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடலோரக் காவல் படை வீரர்கள் காணாமல் போன மீனவர்களை தேட கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருடைய உறவினர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். மேலும் ஒரு மீனவரைத் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:குவைத் தீ விபத்து: அடுத்த வாரம் ஊருக்கு திரும்ப இருந்த ராமநாதபுரம் நபர் உயிரிழப்பு!