தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமனாரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற மருமகன்.. கொலையில் முடிந்த குடும்ப தகராறு! - Son in law killed father in law - SON IN LAW KILLED FATHER IN LAW

Son in law killed Father in law: குடும்ப பிரச்னை காரணமாக மாமனாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மருமகனை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கைதானவர்
கைதானவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:43 AM IST

சென்னை:கோயம்பேடு அமுதா நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணண் (65), அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் காவல் பணியாளர் (வாட்ச் மேன்) வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், தன் மகளை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்த மருமகன் மகேஷை கண்ணன் தட்டி கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே 23 அன்று இரவு, மகேஷ் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கிய போது, அதனைக் கண்ட கண்ணன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கடும் ஆத்திரமடைந்த மகேஷ், என் குடும்ப பிரச்னையில் எதற்காக என்னை கேள்வி கேட்கிறாய்? என்று ஆவேசமாக பேசி மாமனாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், ஆத்திரம் அடங்காத மகேஷ், பிள்ளையார் கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார் கண்ணன் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு, அங்கு இருந்து கடலூர் மாவட்டத்திற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் சென்று மகேஷை சுற்றி வளைத்து கைது செய்து, அன்றே புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகேஷ் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, தற்போது கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார்.. நீச்சல் அடித்தே உயிர் தப்பிய நிகழ்வு! - Then Pennai River Car Accident

ABOUT THE AUTHOR

...view details