தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுக்கும் பல்வேறு அமைப்புகள்! - Political Parties Supporting DMK

Political Parties Supporting DMK: மூவேந்தர் முன்னேற்றக் கழக ஸ்ரீதர் வாண்டையார், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

Political Parties Supporting DMK
Political Parties Supporting DMK

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 4:12 PM IST

சென்னை: நாடாளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற, தங்களது ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (மார்ச் 21) நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

அந்த வகையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜக்கையன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இவர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் பொன்.முருகேசன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் தலைவர் வி.என்.கண்ணன், திராவிட தமிழர் கட்சித் தலைமை நிலைய செயலாளர் பேரறிவாளன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் ஆகியோரும் இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதல்வர் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை குறைப்பை அறிவித்துள்ளார். இது இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவர். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு கோரி வருகிறோம். அதனை, ராகுல் காந்தியும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் செய்வார்கள் என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவருக்கு அதிமுகவில் எம்பி சீட்.. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்? - Who Is Simla MuthuCholan

ABOUT THE AUTHOR

...view details