சென்னை: அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த நன்மைகள் மற்றும் அதை கடைபிடிக்கத் தவறுவதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், அவ்வப்போது சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையில் உர்பசேர் சுமீத் மற்றும் தனியார் வானொலி உடன் இணைந்து "Kuppai in Bin, Let's make Chennai win" என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று நடைபெறும் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திடக்கழிவு மேம்பாடு குறித்த விழிப்புணர்வு வழங்கினார். முன்னதாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இதையும் படிங்க:விண்ணைத் தொடுகிறதா பூண்டின் விலை? காய்கறிகளின் விலையும் கிடுகிடு உயர்வு!