சென்னை: சென்னை, போரூர் அடுத்த அயப்பன்தாங்கல் புஷ்பா நகர் பகுதியில் பிரஸ்டீஜ் ஸ்பா என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இருபாலருக்குமான இந்த அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ஆவடி காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்றிரவு அழகு நிலையத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த அழகு நிலையத்திலிருந்து பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த பவுன்சர் தினேஷை (43) கைது செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த ஆறு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்றொரு தினேஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பின்னர், இதுகுறித்து விசராணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அயப்பன்தாங்கலில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகைக்கு வீடு எடுத்து இருபாலருக்குமான அழகு நிலையம் தொடங்கி உள்ளனர். இதில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளனர்.