சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் தலா 3 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த நியாய விலைக் கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைந்துள்ளதால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, 950 அட்டைதாரர்கள் கொண்ட கொல்லங்குடி நியாய விலைக் கடைக்கு, வெறும் 38 லிட்டர் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அனைத்து அட்டைதாரர்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்த நியாய விலைக் கடை பணியாளர், ஒவ்வொரு அட்டைதாரருக்கும் 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் இரண்டு ரூபாய்க்கு விநியோகம் செய்துள்ளார்.