திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியானர். இதில் காரில் இருந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இன்று விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் ஆந்திரா சென்று திரும்பி வரும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக கேகே சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.