சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து வந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்.26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலும் தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமின் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.