தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்லாந்து டூ திருச்சி விமானத்தில் 12,400 சிகரெட் பாக்கெட்கள் கடத்தல்! - CIGARETTES SEIZED AT TRICHY AIRPORT

தாய்லாந்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம், கடத்திவரப்பட்ட சிகரெட் பாக்கெட்கள்
திருச்சி விமான நிலையம், கடத்திவரப்பட்ட சிகரெட் பாக்கெட்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 10:08 PM IST

திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த தாய் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:520 டன் அளவில் குவிந்த குப்பை.. அகற்றும் பணியில் திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்!

இதையடுத்து, அவரது உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 ஆயிரத்து 400 சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details