சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒரே மேடையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார்.
நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டி! - Veerappan daughter Vidya - VEERAPPAN DAUGHTER VIDYA
Veerappan daughter Vidya: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யாவை நாம் தமிழர் கட்சி களமிறக்கியுள்ளது.
Etv Bharat
Published : Mar 23, 2024, 10:25 PM IST
அந்த வகையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா, நாம் தமிழர் கட்சியில் களமிறங்குவதாக சீமான் அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பால், நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.