தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர் தேர்வு.. கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! - Teachers Recruitment Board

Teachers Recruitment Board: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம் (credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 10:47 PM IST

சென்னை:இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் , உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்தத்தாள் திருத்தப்படும்.

போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில், தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி 2 ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.

மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

போட்டி தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்துத் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுத் தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே 1,768 ஆசிரியர்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு கூடுதலாக ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கான போட்டி எழுத்து தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருச்செந்தூரில் நடிகை ரோஜா செய்த செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ! - Actress Roja Viral Video

ABOUT THE AUTHOR

...view details