சென்னை:தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவு பெற உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அச்சடித்த அனைத்து புத்தகங்களையும், நோட்டுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகள் திறக்க பட உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அச்சடித்த அனைத்து புத்தகங்களையும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் பாடப்புத்தகங்களும், தமிழ்நாடு காதிக நிறுவனத்தின் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளுக்கு புத்தகங்களை பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டக் கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்களை வழங்குவதற்காக வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட தேவைப்பட்டியலின்படி பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை சரிபார்த்து பெற்றுக்கொள்வதுடன் அதை உறுதி செய்திட வேண்டும் என்கிறது, மேலும் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவினையும் மாவட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு தயாராகும் புத்தகங்கள்:இவ்வாறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மாவட்ட குடோனில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.