மதுரை:பெண் காவலர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, மே 4ஆம் தேதி தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் 294(b), 353, 509 IPC, 4 - TNPHW ACT. 67 - IT ACT 353 IPC r/w பிரிவு 4 தமிழ்நாடு (பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம்) 2000 பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் கைது செய்தனர்.
அப்போது அதே நாளில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார், சவுக்கு சங்கரின் காரில் இருந்து 500 கிராம் கஞ்சா எடுத்தது மற்றும் பெண் காவலரைத் திட்டி தள்ளிவிட்டு, அவரது பணியைச் செய்ய விடாமல் செய்ததாக ஐபிசி பிரிவுகள் 195/2024 U/S 294(b), 353 IPC & 4 of TNPHW ACT & 8(c) r/w 20(b)(ii)(A), 29(1), 25 of NDPS ACT-ன் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து திருச்சி, சென்னையிலும் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏவின் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவதூறு பரப்பியதாக கூறி பல வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தன.
முன்னதாக கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.