தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar - SAVUKKU SHANKAR

Savukku Shankar Case:"கோவை சிறை கண்காணிப்பாளர்தான் என் கையை உடைத்தார் எனவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Savukku Shankar Photo
Savukku Shankar Photo (Photo Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 12:28 PM IST

Updated : May 13, 2024, 12:34 PM IST

சவுக்கு சங்கரை போலீசார் சிகிச்சைக்காக அழைத்து வந்த வீடியோ (Video Credits: ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பெண் காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்து கைது செய்தனர். பின்னர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில், சவுக்கு சங்கருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில், அவரது வலது கையில் உள்ள எலும்பில் 2 இடங்களில் லேசான முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அதற்காக மாவு கட்டுப் போட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து, மீண்டும் சிகிச்சைக்காக இன்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, கைக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர், மருத்துவர்கள் மீண்டும் மாவுக் கட்டுப் போட பரிந்துரை செய்தனர். அதையடுத்து சவுக்கு சங்கருக்கு மீண்டும் புதிதாக மாவுக் கட்டுப் போடப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் வெளியே அழைத்து வரும்பொழுது பேசிய சவுக்கு சங்கர், "கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். அதுமட்டுமின்றி கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரை மீண்டும் சிறைக் அழைத்து சென்றனர். இந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்திருந்த நிலையில், அதன் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எனது கணவரை மீட்டு தாருங்கள்" என யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி கோரிக்கை!

Last Updated : May 13, 2024, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details