சேலம்:சேலம் மாவட்டம்கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர் கடந்த பத்தாண்டுகளாக கடம்பூர் கிராமத்தில் பட்டாசு செய்யும் தொழிற்சாலை ஒன்றை பட்டாசு குடோனாக நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அந்த பட்டாசு குடோனில் வேலை செய்பவரான கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பட்டாசு செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை எடுப்பதற்காக பட்டாசு குடோனுக்குள் சென்று உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடோன் முற்றிலும் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சத்தியா மற்றும் விஜயா ஆகிய இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.