தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொத்தவால்சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் - இருவரிடம் போலீசார் விசாரணை! - Rs one Crore seized

Rs.1 Crore Seized: சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றி, இது குறித்து இரண்டு நபர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணத்தை கொண்டு சென்ற 2 நபர்கள்
பணத்தை கொண்டு சென்ற 2 நபர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 4:53 PM IST

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ஒரு கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றினர். மேலும், பணம் கொண்டு வந்த இரண்டு நபர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் நேற்று (மே 13) இரவு ரோந்து வாகனத்தில் சென்ற போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் வைத்திருந்த பையில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், ஹாஜா (23) மற்றும் தனசேகர் (43) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள மணி டிரான்ஸ்பர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அங்கு இந்த பணத்தைக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பணத்தினை வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாமன்னன் பட பாணியில் கொடுமை? திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த நிலைமையா? - Thirunallur Panchayat President

ABOUT THE AUTHOR

...view details