திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணி ஒருவரை சோதித்த போது, அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது ஆசனவாயில் மூன்று சிறு பாக்கெட்டுகளாக இருந்த 1081 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், அதை உருக்கி 977 கிராம் தங்கக் கட்டியாகக் கைப்பற்றினர்.