திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு, உட்பட்ட 31 வது வார்டில் உள்ள குல வணிகர்புரம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்பட்டதாகவும், கடந்த 11 நாட்களாக தொடர்ந்து குடிநீர் வரவில்லை எனவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை கண்டித்து 31 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அமுதா சுந்தர் தலைமையில் பொதுமக்கள் காலி குடத்துடன் இன்று (ஆகஸ்ட் 7) நெல்லையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுவாகவே போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.