தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விழுந்தால் கட்டிக்கொடுக்கிறோம்'.. சூளைமேட்டில் சரிந்த அப்பார்ட்மெண்ட் சுற்றுச்சுவர்.. பீதியில் குடும்பங்கள்!

சென்னை சூளைமேட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் சுற்று சுவர் திடீரென சரிந்து சாய்ந்ததால் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுற்றுச்சுவர் சரிந்த இடம்
சுற்றுச்சுவர் சரிந்த இடம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 11:11 AM IST

சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் 200 குடும்பங்களை சேர்ந்த 600 பேர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்று சுவர் திடீரென சரிந்து பூமிக்குள் 30 அடி வரை உள்வாங்கியது. இதனை கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பீதியடைந்து பதறி அடித்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து அருகே இருந்த காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்து சுற்று சுவரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த டி.என். குமார் ஈடிவி பாரத் செய்திக்கு பேசிய போது, மதியம் திடீரென தடுப்பு சுவர் உள்வாங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே போல் தடுப்பு சுவர் விழுந்து அது சரி செய்யப்பட்டது. இன்று மீண்டும் சுற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை மழை.. துன்பத்திலும் இன்பம் என்பது போல் விளையாடி மகிழும் சிறுமி!

எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அருகில் நட்சத்திர விடுதி கட்டி வருகின்றனர். அதற்கான பணியின் போது தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் பல புகார்கள் கொடுத்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அவர்களின் நோக்கம் கட்டிடம் கட்டுவதில் தான் இருக்கிறது, மக்கள் உயிர் குறித்து இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

மேலும், சுற்று சுவர் குறித்து நட்சத்திர விடுதி நிர்வாகத்திடம் கேட்டபோது, கட்டிடம் விழுந்தால் நாங்கள் கட்டிக்கொடுக்கிறோம் என அலட்சியமாக பதிலளிப்பதாக தெரிவித்தார். மேலும், நாங்கள் புகார் தெரிவித்த உடனே நாடாளுமன்ற உறுப்பினர், காவல்துறை, மாநகராட்சி உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சரி செய்ய நிபுணர் குழுவை அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால், எங்கள் கோரிக்கை என்பது நட்சத்திர விடுதியின் சுற்று சுவரை உறுதி செய்த பிறகே அடுத்த கட்ட பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details