தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு மனை விற்பனையில் மோசடி? கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது! - ARRESTED

தவணை முறையில் பணம் கட்டினால் வீட்டுமனை தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை, கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தங்கராஜ்
கைது செய்யப்பட்டுள்ள தங்கராஜ் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 5:59 PM IST

கோயம்புத்தூர்:கோவை போலீசார் அளித்துள்ள தகவலின்படி , டாடாபாத் மற்றும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 'கோகுலம் கார்டன்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் தங்கராஜ். இவர் வீட்டுமனைகள் வாங்க பல்வேறு மாதாந்திர தவணைத் திட்டங்களை அறிவித்து, அதில் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைகளை காட்டி, மாதம் தோறும் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2012 ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள நிலத்தை தவணை முறையில் விற்பதாக கூறி பணம் வசூலித்துள்ளார். ஆனால் பணம் கட்டிய நபர்களுக்கு வீட்டுமனையை பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்தாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பணம் கட்டி ஏமாந்த கோவையைச் சேர்ந்த பிரசன்ன குமாரி உட்பட 30க்கும் மேற்பட்டோர் 70 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க:தாயை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற மகள்.. அலறிய மூதாட்டி.. பதறிய பொதுமக்கள்.. சென்னை அதிர்ச்சி!

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு (Cr No. 330/ 2024 IPC 406, 420) செய்த கோவை ரத்னபுரி போலீசார், ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை கைது செய்ததுடன் அவரது ஜாக்குவார் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கோகுலம் கார்டன் ரியல் எஸ்டேட் நிதி நிறுவனத்தின் மேலாளர் நாகராஜ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details