சென்னை:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதுண்டு. இந்த கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் செல்வதற்கான சாலை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அக்னி தீர்த்தம் அருகே ராமேஸ்வரம் நகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர், அப்படியே கடலில் கலக்கிறது. பக்தர்கள் புனித நீராக கருதப்படும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால், கடல் நீர் அசுத்தமாகிறது. இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க:'ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்'.. பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி ஆதரவு குரல்!
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளாட் அமர்வு முன்பாக நேற்று (நவம்பர்.28) விசாரணைக்கு வந்தது. அப்போது ராமேஸ்வரம் மாநகராட்சித் தரப்பில், வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி. சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓலைகுடா எனும் பகுதியில் குழாய் மூலம் கொண்டு சென்று அங்கு காடுகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும். இதற்காக 52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் கோவில் பகுதியில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், இந்த விபரங்களை ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்