தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை!

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொன்னேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்
பொன்னேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருவள்ளூர்:கவரைப்பேட்டையில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு பெட்டி தீப்பற்றிய நிலையில் 20 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ரயில் விபத்து தொடர்பான வழக்கில், லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க:கவரைப்பேட்டை ரயில் விபத்து சதியா?.. வழக்கில் புதிய திருப்பம்!

இந்த விபத்தில், ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போல்ட், நட்டுகள் திட்டமிட்டு கழட்டப்பட்டுள்ளதால் இது சதிச்செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப் பிரிவு (ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரயில்வே போலீசார் சேர்த்துள்ளனர்.

பொன்னேரியில் கடந்த மாதம் இதே போன்று தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பொன்னேரி ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் ரயில்வே தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரு வேறு சம்பவ நாளில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரயில் நிலையப் பயணிகளிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details