தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக தொடங்கிய புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு! - PUDUKKOTTAI VADAMALAPUR JALLIKATTU

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 11:19 AM IST

Updated : Jan 17, 2025, 11:49 AM IST

புதுக்கோட்டை:தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாட்டின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியிலும், அதனைத் தொடர்ந்து நேற்று ஜனவரி 16ஆம் தேதி ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியன்விடுதியிலும், குளத்தூர் அருகே உள்ள மங்கத்தேவன்பட்டியிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி.17) புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களையாபட்டி ஆகிய மூன்று ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறும் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் (ETV Bharat Tamilnadu)

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்: டிராஃபிக் ஜாமில் சிக்காமல் இருப்பது எப்படி?

முதலில், வடமலாப்பூர் கருப்பர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் காளை, நார்த்தாமலை கோயில் காளைகள், வடசேரிபட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் களமிறங்கியுள்ளன. மேலும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்று உள்ளனர்.

சீறிவரும் காளைகளை வீர தீரத்துடன் காளையர்கள் அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளையர்களின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளாக குக்கர், மிக்ஸி, கட்டில், சைக்கிள், வெள்ளி காசு, ரொக்கம் பணம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

Last Updated : Jan 17, 2025, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details