நெல்லை: ஐஐடி இயக்குனர் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மாட்டு கோமியத்தை தபாலில் அனுப்ப முயன்ற திராவிடத் தமிழர் கட்சியினர் தடுத்த நிறுத்தப்பட்டனர்
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டது எனவும் அதில் 80 வகையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அதேசமயம் ஐஐடி இயக்குனருக்கு ஆதரவாக பாஜக சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஐஐடி இயக்குனரின் பேச்சை கண்டிக்கும் வகையிலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்று நெல்லை மாவட்ட திராவிட தமிழர் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.