தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யான புகார் அளித்த தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு"- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பொய்யான பாலியல் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 7:06 PM IST

மதுரை:பொய்யான பாலியல் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் 22வது பிரிவின் கீழ் மதுரை மாநகர் காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ராஜமோகன் கடந்த 2019ஆம் ஆண்டு பக்கத்து வீட்டை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் போக்சோ வழக்கில் ராஜமோகனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, ராஜமோகனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்தாண்டு தீர்ப்பளித்தது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி ராஜமோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். பின்னர் நீதிபதி அளித்த உத்தரவில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். புகார், வாக்குமூலம், நீதிமன்ற விசாரணை ஆகியவற்றின் சிறுமியின் சாட்சியங்கள் முரண்படுகின்றன.

இதையும் படிங்க:ஜெர்மன் நாட்டு இளைஞர்களை கவர்ந்த சாணி அடிக்கும் திருவிழா.. ஈரோடு தாளவாடியில் விநோதம்!

சிறுமியின் தாயாரின் 2வது கணவரை ராஜமோகன் தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்துள்ளனர். மருத்துவ ஆதாரம் இல்லை. இவற்றிலிருந்து மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மையில்லை என்பது தெரிகிறது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2வது கணவர் இடையிலான தகாத உறவிலிருந்து தப்பிக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பொய் பேசாது என்ற இயல்புக்கு எதிராக சிறுமியும் உள்நோக்கம் தெரியாமல் மனுதாரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் 22வது பிரிவின் கீழ் மதுரை மாநகர் காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வேண்டும்,"என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details