சென்னை:சென்னை அசோக் நகர் பகுதியில் அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் வாலிபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வர்(27),இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியில் பி சி ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ஷிப்டில் பணிபுரிவதற்காக அதிகாலையில் தம்முடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் அசோக் நகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே தவறான பாதையில் வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக புவனேஸ்வரின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.