கும்பகோணம்:கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில், உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இதே போன்று 40க்கும் மேற்பட்டோர் இந்த நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் தனலட்சுமி நகரில் வசித்து வருபவர் சந்திரமோகன் (48). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜான் செல்வராஜ் நகரில் சூர்யா சிட்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதில், திருவிடைமருதூரைச் சேர்ந்த முரளி என்பவர் ரூபாய் 7.5 லட்சம் வைப்புத் தொகையாக முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை முதிர்வு காலம் கடந்த பிறகும் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், இது குறித்து முரளி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க:உச்சமடைந்த வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!