தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்முடி மீதான வழக்கு விசாரணை வருகிற ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - Ponmudi case

Ponmudi Case: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வருகிற ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 3:05 PM IST

சென்னை:வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில், இதுவரை 33 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இவர்களில் 26 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய மூவர் மட்டுமே ஆஜராகினர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சேலம் விபத்தில் 5 பேர் மரணத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details