சென்னை:தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து:குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து:பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் வாழ்த்து: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சர் வாழ்த்து:முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சரான பினராயி விஜயன், அன்பு தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், முடிவில்லாத மகிழ்ச்சியுடன், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் வாழ்த்து:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதின் கட்கரி வாழ்த்து:மந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்கே வாழ்த்து:காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் நலமாக வாழவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் வாழ்த்து:சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.