தென்காசி: தென்காசி மாவட்டம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் அன்ஸ்டன் (வயது 26). இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தமாக காண்ட்ராக்ட் மூலம் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (பிப்.14) மது அருந்திவிட்டு தனது நன்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இருந்த காவலர்கள் அன்ஸ்டன் மற்றும் அவரது நன்பர்கள் உட்பட மூவரை பிடித்து சோதனையில் ஈடுபட்டதாகவும், பின்பு இருசக்கர வாகனத்தில் சாவியை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் சாவியை திரும்ப கேட்டு அன்ஸ்டன் மற்றும் அவரது நன்பர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அன்ஸ்டனை காவலர் ஒருவர் பிடித்து கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் மிதித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பொது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அன்ஸ்டன் எனும் இளைஞரை கொடூரமான முறையில் தாக்கிய காவலர் அழகு துரையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுரேஷ் குமார் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2024; வரலாற்றில் முதல்முறையாக பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!