மயிலாடுதுறை:மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு இருசக்கர மெக்கானிக் பட்டறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் இளைஞர்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், அதிவேக இரு சக்கர வாகனம் புதிதாக வாங்கப்பட்டதால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விலை உயர்ந்த வாகனங்களில் சைலன்சர் பகுதியை மாற்றி அமைத்து வேகமான முறையில் சப்தம் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட ஹாரன்களை உபயோகித்ததும் தெரிய வந்தது.