தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போன சென்னை பெண் கொலை! சைக்கோ கொலையாளியா? - woman Corpse recovered - WOMAN CORPSE RECOVERED

woman Corpse recovered: கடந்த வாரம் காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண், குடியாத்தம் ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒருவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 12:10 PM IST

வேலூர்:சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நிலையில், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, தற்போது தனது தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்.14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை.

ஆகவே, அவரது தாயார் இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார், தீபாவின் செல்போன் எண்களை ஆராய்ந்துள்ளனர். தீபா கடைசியாக பேசியிருந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஹேம்ராஜ் விசாரணையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் தனக்கு நட்பு ஏற்பட்டதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், இதனிடையே தனது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவுடன் பேசியதாகவும் கூறியுள்ளார்.

அப்போது பேசுகையில், தான் ரயில்வே பணி தேர்வுக்காக தயாராகி வருவதாகவும், நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறி, மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி, கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை வரவழைத்ததாகவும், இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று, அங்கு தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கெனவே இளம்பெண்ணை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட வழக்கில் சிக்கியவர் என்பதால் மனநல கோளாறு கொண்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு..ஒருவரின் உயிரை பறித்த சோகம்..சடலத்துடன் உறவினர்கள் போராட்டம் - பரபரப்பு! - Sivaganga Youth Death Issue

ABOUT THE AUTHOR

...view details