தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கையின் கணவரின் திருமணத்துக்கு தடையாக இருந்த அண்ணன் கொலை.. கிணத்துக்கடவு சம்பவத்தில் திருப்பம்! - Kinathukadavu murder case

Kinathukadavu auto owner murder case: கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளரை கொலை செய்த வழக்கில் சிறுவர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:52 PM IST

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil nadu)

கோயம்புத்தூர்:கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவர் சரக்கு ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், செட்டிபாளையம் - வடசித்தூர் சாலையில் பனப்பட்டி பிரிவு அருகே அவரது வாகனத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த நிலையில், அவர் ஆட்டோவில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இது குறித்து நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் சந்தேகத்தின் பேரில், இறந்த போன பிரபாகரனின் தங்கையின் கணவரான போத்தனூரைச் சேர்ந்த சாதிக் பாஷா (36) என்பவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து அவரிடம் விசாரணையில் நடத்தியதில், பிரபாகரனின் தங்கையுடன் திருமணம் நடந்து, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு பிரபாகரன் தடையாக இருந்துள்ளார்.

இதனால் பிரபாகரன் மீது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, சாதிக் பாஷா அவரது நண்பர்களான மணிகண்டன் (24) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் மூலம் பிரபாகரனைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து, கடந்த நேற்று பிரபாகரனை வாடகைக்கு அழைப்பது போல் மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஒருவரும் வரவழைத்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சாதிக்பாஷா மற்றும் மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆட்டோ டிரைவர் போட்ட ஸ்கெட்ச்.. கச்சிதமா நடந்த படுகொலை.. ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் பகீர் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details