தமிழ்நாடு

tamil nadu

கொலைக்கு மூளையே மொட்டை கிருஷ்ணன்? வெளிநாட்டில் தப்பியவரை பிடிக்க போலீஸ் தீவிரம்! - MOTTAI KRISHNAN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 7:28 PM IST

Advocate Mottai Krishnan abscond: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பபட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொண்ணை பாலு உள்ளிட்ட 24 பேரை இதுவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவாக இருக்கும் பிரபல ரவுடி சம்போ செந்திலைக் கைது செய்ய காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில், ரவுடி சம்போ செந்தில் உடன் தொடர்பில் இருந்த பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், சம்போ செந்திலின் கூட்டாளி வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என்பவர் தான் செந்திலுடன் இணைந்து இந்த கொலைக்கான சதித்திட்டம் தீட்டி, அனைவரையும் ஒன்றிணைத்தது என போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் சிங்கப்பூர் தப்பிச் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் அங்கிருந்து சவுதி அரேபியா தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அதனால் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல், இன்டர்போல் உதவியை நாடி, சவுதி அரேபியாவில் பதுங்கி இருக்கும் மொட்டை கிருஷ்ணனைக் கைது செய்து சென்னை அழைத்து வரும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை கைது செய்து விசாரித்தால், தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்திலைப் பிடிக்க சுலபமாக இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்.. கிருஷ்ணகிரி விரையும் சிறப்புக்குழு!

ABOUT THE AUTHOR

...view details