வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் போக்கிலி வசூர் ராஜா. இவர் மீது ஆட் கடத்தல், வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போக்கிலி வசூர் ராஜா கடந்த ஒன்றரை வருடங்களாக கோவை மத்திய சிறையில் உள்ளார். மேலும் அவர் மீது மற்றொரு வழக்கு பதியப்பட்ட நிலையில் அவ்வபோது விசாரணைக்காக வேலூர் சிறைக்கு அவரை அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு நாளன்று வேலூர் ஆட்சியரிடம் போக்கிலி வசூர் ராஜாவின் தாய் கலைசெல்வி மற்றும் மனைவி போக்கிலி வசூர் ராஜாவிற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும். அவர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து என்கவுடர் செய்து விடுவார்களோ என பயம் ஏற்படுவதாக ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்கிலி வசூர் ராஜாவின் தாய் கலைசெல்வி, “என் மகனை பலத்த பாதுகாப்புடன் வேலூருக்கு வழக்கு விசாரணைக்கு அழைத்துவரபடுகிறார். அப்போது அவருடன் உறவினர் யாரும் பேச கூட முடியாதபடி காவல்துறை பாதுகாப்பு இருக்கிறது.
போக்கிலி வசூர் ராஜாவின் தாய் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:'மேவாட்' கொள்ளையர்கள் நாமக்கல்லில் என்கவுண்டர்.. காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்த மேற்கு மண்டல ஐஜி!
இந்த நிலையில் என் மகன் போக்கிலி வசூர் ராஜா, ஆட்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனால் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதற்கு வசூர் ராஜா தான் காரணம் எனக் கூறி ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.
மேலும் போக்கிலி வசூர் ராஜாவை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். என் மகன் திருந்தி வாழ்ந்து கொண்டிருந்தான். அவனை வழக்கில் ஆஜராகவில்லை எனக் கூறி காவல்துறையினர் கைது செய்ததோடு பொய்யான வழக்குகளையும் போட்டு சிறையில் வைத்துள்ளனர். அவனுக்கு ஒரு குழந்தையுள்ளது அதன் வாழ்க்கை குறித்து என் மகன் சிந்திக்க வேண்டும். என் மகன் திருந்தி வாழ ஆசைப்படுகிறான். இனி அவன் மேல் புகார் எதும் வராமல் நாங்கள் நிச்சியமாக பார்த்துகொள்ளுவோம். அரசு ஒரு வாய்ப்பை என் மகனுக்கு அளிக்க வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்