சேலம்:தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின் போது அரசு கல்லூரிகளில், சமூக நீதியை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு வெளியிட்ட 161 என்ற அரசாணையின்படி, மாணவர் சேர்க்கையின் போது, இட ஒதுக்கீட்டு விதிகள் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் பிருந்தா தேவியிடம், பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிரப்ப வேண்டும். அதன் பிறகு காலியிடங்கள் இருந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு மாணவர் சேர்க்கை நிரப்பப்பட வேண்டும். இந்த இரண்டு பிரிவிலும் போதிய இடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் மட்டுமே அந்த இடங்களை பட்டியலினம் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.