டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு நாளை மறுநாள் வருகிறார். அன்று மாலை படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
7 ஆம் கட்ட மக்களவை தேர்தல், அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் கூட அவர் மே 18 ஆம் தேதி கேதார்நாத் குகைக்கு சென்றிருந்தார்.
அதேபோல, இந்த முறையும் தியானத்தில் ஈடுபடுகிறார். மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தியானம் செய்த பின்னர், ஜூன் 2 ஆம் தேதி திருவனந்தபுரம் வழியாக மீண்டும் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.