ராணிப்பேட்டை: சோளிங்கரில் அரை மணி நேரத்தில் பல்வேறு இடங்களில், ஆறு பேரை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. அதனால், பலத்த காயம் அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாயைப் பிடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதாகவும், ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை சுற்றித் திரிவதாகவும், பகல் நேரங்களில் இரவு நேரங்களில் எனப் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனபால் (60), தமிழ்ச்செல்வி (23), பாரதி (40) ஆகியோரை வெறிநாய் ஒன்று திடீரெனத் தாக்கி கடித்துவிட்டு, அங்கிருந்து ஓடியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.