மயிலாடுதுறை:ஆடி அமாவாசை இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி 108 திவ்ய தேசங்களில் 40 வது திவ்ய தேசமான பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாளுக்கு கடற்கரையில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும். ஆடி அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர்.
முன்னோர்களுக்கு தலைவாழை இலை போட்டு எல், பச்சரிசி, வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், கீரை வகைகள், காய்கறிகள் வைத்து சுடம் பத்தி ஏற்றி தீபாராதனை காண்பித்து செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து, தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடினர்.