தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து போலீசாரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி! - Cell Phone Flush In Chennai - CELL PHONE FLUSH IN CHENNAI

Cell Phone Flush in Chennai: சென்னை, மாங்காட்டில் பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் மற்றும் மொபைல்போன் கோப்புப்படம்
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் மற்றும் மொபைல்போன் கோப்புப்படம் (photo credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 5:04 PM IST

Updated : May 14, 2024, 11:03 PM IST

போலீசாரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை விசாரிக்கும் வீடியோ (video credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: மாங்காடு அடுத்த சக்தி நகர், லட்சுமி புரம் சாலையில் வளர்மதி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மொபெட்டில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர், வளர்மதியின் அருகில் சென்று, அவர் கையில் வைத்திருந்த செல்போன் பையைப் பிடுங்கிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவர் சத்தம் போட்டதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒரு நபர் தப்பி ஓடிய நிலையில், பிடிபட்ட ஒருவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை விசாரித்ததில், தான் அயனாவரத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை சோதனை செய்தபோது, அவரது பாக்கெட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பிடிபட்ட நபரை மாங்காடு போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். பின்னர், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அயனாவரத்தில் இருந்து வரும் வழியில் நடந்து சென்றவர்களிடம் செல்போனை பறித்து வந்ததும், மதுரவாயல் போக்குவரத்து போலீசார் ஒருவரிடம் இருந்தும் செல்போனை பறித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நபர் மற்றும் மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து விலகினார் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி! - MELINDA EXITS FROM GATES FOUNDATION

Last Updated : May 14, 2024, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details