தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி கொண்டாட்டம்: சென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க குவியும் மக்கள்!

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொதுமக்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள்
பொதுமக்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை:தீபாவளி என்றாலே பட்டாசு இனிப்பு, புத்தாடை ஆகியவை தான் நம் நினைவிற்க்கு வரும். அந்த வகையில் பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனையானது திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு கடைகள் ஏ, பி, சி, டி எனப் பிரிக்கப்பட்டு விற்பனையாது நடைபெற்று வருகிறது.

அனைத்து கடைகளின் முன்பாக தண்ணீர், மணல், சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது தீவுத்திடல் முன்பாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பட்டாசு விற்பனையாளர் ஜாகீர் உசேன் கூறுகையில், "தீவுத்திடலில் தீபாவளிக்காக பட்டாசு கடைகளை ஆண்டு தோறும் அமைத்து வருகிறோம்.

பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால் இதுவரை இதுபோன்ற குறைந்த நாட்கள் விற்பனைக்காக அனுமதிக்கபட்ட நிகழ்வை நாங்கள் சந்தித்தது இல்லை. எப்போதும் தீபாவளிக்கு 2 வாரங்களுக்கு முன்பாக பட்டாசு விற்பனை செய்ய எங்களுக்கு அனுமதி தரும் நிலையில் 4 நாட்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 4 நாட்களில் எங்களால் எவ்வளவு பட்டாசு விற்பனை செய்ய முடியும்.

இதையும் படிங்க:சிவகாசி சேல்ஸ் எப்படி இருக்கு? - பட்டாசு தொழில் நிலைமை இதுதான்..!

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மக்கள் வருகை குறைவாக உள்ளது. இன்றும் நாளையும் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சங்கம் கடைகளை டெண்டர் எடுத்து இருந்தால் கடைகளின் வாடகை குறைவாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது கடைகளுக்கான வாடகை அதிகமாக உள்ளது.

குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்து வருவதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பட்டாசு கடை வைக்கக் கொடுக்கப்பட்ட அனுமதி காலதாமதம் ஏற்பட்டுவிட்டதால் பட்டாசு விற்பனை குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் லாபம் தங்களுக்கு தேவையில்லை போட்ட முதல் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும் நிறைய புது ரகங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டாசு உள்ளது" என தெரிவித்தார்.

இது குறித்து பட்டாசு வாங்க வந்த பொதுமக்கள் கூறியதாவது,"வெளிச்சமும்,சத்தமும் கொண்ட பண்டிகை தீபாவளியாகும்
நிறையப் புதுவகையான பட்டாசுகள் உள்ளது. மொத்தவிற்பனை என்பதால் விலை குறைவாக இருந்தது. இரவு நேரங்களில் வெடிக்கும் வகையிலான பட்டாசுகளை அதிகம் வாங்க உள்ளோம். நிறைய கடைகள் ஒரே இடத்தில் உள்ளதால் பிடித்த பட்டாசு வாங்க எளிமையாக உள்ளது" என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details